Latestஉலகம்

நேப்பாள விமான விபத்து இதுவரை 21 உடல்கள் மீட்பு

காட்மன்டு, மே 31- நேப்பாளத்தில் தாரா ஏர் விமானம் விபத்துக்குள்ளான மலைப்பகுதி வட்டாரத்திலிருந்து இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 22 பேருடன் பயணத்தில் ஈடுபட்டிருந்த அந்த விமானத்தின் உடைந்த பகுதிகள் நேற்று கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து தீவிரமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுப்பயணிகளை ஏற்றிச்செல்லும் சேவையில் ஈடுபட்ட அந்த விமானம் ஞாயிற்றுக்கிழமை காலையில் நேப்பாளத்தின் சுற்றுலா மையமான
Pokhra விலிருந்து மற்றொரு மலைப்பகுதி நகரான Jomsom-மிற்கு சென்று கொண்டிருந்தபோது அந்த விமானம் காணாமல்போனது. விபத்துக்குள்ளான விமானத்தில் 22 பேர் பயணம் செய்தனர். தற்போது 21 சடலங்கள் மீட்கப்பட்டுவிட்டது. எஞ்சிய ஒருவரை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேப்பாளத்திற்கு வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த மலையேறிகள் மட்டுமின்றி நேப்பாள மற்றும் இந்திய பக்தர்கள் முக்திநாத் ஆலயத்திற்கு செல்வதற்கும் சுற்றுலா சேவையை மேற்கொண்டுவரும் தாரா ஏர் விமான சேவையை பயன்படுத்துகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!