Latestமலேசியா

நேரடி சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் பத்துமலைக்கு RM1 மில்லியன் ஒதுக்கீடு – டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் நன்றி

கோலாலம்பூர், பிப் 13 – அண்மையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமைச் தாம் நேரில் சந்தித்து, பத்துமலை ஆலய மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி விளக்கமளித்து உதவி நிதியும் கோரியிருந்த நிலையில், தற்போது பிரதமர் 1 மில்லியன் ரிங்கிட் வழங்கியிருப்பது குறித்து தம் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ம.இ.கா தேசிய தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

பிரதமருடனான அந்த நேரடி சந்திப்பிற்குப் பிறகு, பிரதமரும் பத்துமலைக்கு நேரடி வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பத்துமலை மேம்பாட்டிற்கு ஆதரவு வழங்கிய சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரிக்கும் விக்னேஸ்வரன் தமது நன்றியை கூறிக் கொண்டுள்ளார்.

தைப்பூசத்திற்கு 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கூடுகின்ற உலகின் முக்கிய முருகன் திருத்தளமாகவும் நாட்டுன் பிரபல சுற்றுலாத்தளமாகவும் உருமாறியிருக்கின்ற பத்துமலையில் வசதிகளை மேம்படுத்தவும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசாங்கத்தின் ஒப்புதலும் நிதியுதவியும் அவசியமாகிறது. இதனை பிரதமரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டுச் சென்ற டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன் அவரின் தலையீட்டை கோரியிருந்தார்.

அந்த அடிப்படையில், பிரதமரின் இந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்பு மிகவும் வரவேற்கக்கூடைய ஒன்று வர்ணித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!