
கோலாலம்பூர், மார்ச் 13 – அரசாங்கத்தின் நேரடி பேச்சுக்களின் மூலம் இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதிக்கான அனுமதியை J&E Advance Tech Sdn Bhd பெற்றதாக அஸ்மின் அலி கூயிருந்ததை அந்த நிறுவனம் மறுத்திருக்கிறது. அஸ்மின் அலி உண்மைக்கு புறம்பான தகவலை கூறியிருப்பதால் அவர் அந்த அறிக்கையை மீட்டுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது. மக்களை திசை திரும்புவதற்காக அஸ்மின் முழுப் பொய் கூறியுள்ளார்.
அதோடு எங்களிடம் அரசாங்கம் இறக்குமதி செய்த முட்டையை வாங்குவது போன்ற தோற்றத்தையும் அவர் ஏற்படுத்தியுள்ளார். நாங்கள் அரசாங்கத்திற்கு முட்டைகளை விற்பனை செய்யவில்லை என J&E Advance tech Sdn Bhd கூறியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இவ்வாண்டு ஜூன் 23 ஆம் தேதி வரை விழாக் காலத்தில் உள்நாட்டு பேராங்காடி, சூப்பர் மார்க்கெட் மற்றும் மினி மார்க்கெட்டுகளுக்கு வினியோகிப்பதற்காக இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் உரிமையை பெற்றிருந்ததாக J&E Advance tech Sdn Bhd தெரிவித்துள்ளது.