பிலாடெல்பியா, செப் 11 – அதிபர் தேர்தலுக்கான கடந்த விவாதத்தில் ஜோ பைடனை திக்கு முக்காட வைத்த டோனல்ட் டிரம்ப், இம்முறை கமலா ஹரிஸை அதே நிலைக்கு தள்ளுவாரா என எதிர்ப்பார்த்த நிலையில் அதற்கு மாறாக கமலா ஹரில் டிரம்ப்பை தன் ஆளுமை பேச்சால் மடக்கி அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு ABC தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த நேரடி விவாதம் ஒவ்வொரு அமெரிக்க தேர்தலின் போதும் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற விவாதமாகும்.
90 நிமிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த விவாதத்தில் கமலா ஹரிஸ் மிகவும் தயார் நிலையில் வந்ததை பார்க்க முடிந்தது. தன் பேச்சால் டிரம்ப்பை தன் வலையில் சிக்க வைத்தார் கமலா ஹரிஸ் எனலாம்.
ஒரு கட்டத்தில் இனவாதம் பற்றி கேள்வி எழுப்பட்டபோது, கமலா ஹரிஸ் என்ன இனமாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை என டிரம்ப் கூறிய நிலையில், இனவாத அடிப்படையில் அமெரிக்கர்களை பிரிக்கப் பார்க்கிறார் டிரம்ப் என கமலா ஹாரில் டிரம்ப்பை குற்றம்
சாட்டினார்.
இப்படி சூடு பிடித்த இவர்களின் விவாதம், ஒரு கட்டத்தில் தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அதில் ஒரு கட்டத்தில், டிரம்ப் அமெரிக்காவுக்கான ஒரு அவமானம் என்றும் வெளிநாட்டுத் தலைவர்கள் அவரைப் பார்த்து சிரிப்பதாகவும்
அவர் கூறினார்.
இதனிடையே, CNN நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா ஹரிஸ் இந்த விவாதத்தில் வெற்றிப் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி நடைப்பெறவுள்ள அதிபர் தேர்தலில் இந்த கருத்து கணிப்பின் முடிவுகளை வைத்து யார் வெற்றிப் பெறுவார் என கூறிவிட முடியாது.
அடுத்த கட்ட விவாதம் இவர்களுக்கிடையில் நடைபெறுமா என்பது இன்னும் தெரியவில்லை.