
அபுட்ஜா, செப் 11 – நைஜீரியாவில் நெரிசல்மிக்க பயணிகளை ஏற்றிச் சென்ற பெர்ரி ஆழமான நீர்த் தேக்கப் பகுதியை கடக்கும்போது கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் குறைந்த பட்சம் 26 பேர் மாண்டனர். ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்த நைஜீரியாவின் வட மத்திய நீர்தேக்கப் பகுதியில் மீண்டும் இச்சம்பவம் நிகழ்ந்தது. பெண்கள் , குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோரை அந்த பெர்ரி ஏற்றிச்சென்றபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக நைஜர் மாநிலத்தின் அரசாங்க பேச்சாளர் போலோகி இப்ராஹிம் தெரிவித்தார். தங்களது பண்ணைகளுக்கு செல்வதற்காக மிகப் பெரிய அனைக்கட்டு பகுதியை அந்த பெர்ரி கடந்தபோது அது கவிழ்ந்தததாக கூறப்பட்டது. பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறார்கள் என 26 பேர் மாண்டது உறுதிப்படுத்தப்பட்ட வேளையில் இதர 30 பேர் மீட்கப்பட்டனர்.