அபுஜா, நவம்பர்-6 – மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் காதலை முறித்த காதலனைப் பழி வாங்குவதற்காக, காதலி மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பை காதலன் தனது 4 நண்பர்களுடன் பகிர்ந்து குடித்ததால், ஐவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தோரில் இருவர் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவர்.
உணவு ஒவ்வாமையால அவர்கள் மரணமடைந்திருக்கலாமென நினைத்து போலீஸ் விசாரித்த போது, உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து 16 வயது அப்பெண்ணைக் கைதுச் செய்த போலீஸ், மேல் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.