Latestஉலகம்

நைஜீரியாவில் துப்பாக்கிக் கும்பல் அட்டூழியம்;  மரண எண்ணிக்கை 200 ஆக உயர்வு

அபுட்ஜா, ஜன 10 – நைஜீரியாவில் மோட்டார்சைக்கிள் துப்பாக்கிக் கும்பல் நடத்திய தாக்குதலில் மாண்டவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது. அண்மைய காலமாக நைஜீரியாவில் மோட்டார் சைக்கிள் கும்பல் கிராமம் கிராமமாக புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

நைஜீரிய ராணுவம் காடுகளில் தங்களது மறைவிடங்களில் தாக்குதல் நடத்தியதைத் தொடரந்து அதற்கு பதிலடியாக கிராமப்புறங்களில் புகுந்து துப்பாக்கிக்காரங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஆகக்கடைசியான துப்பாக்கிக்காரர்கள் கிராமம் ஒன்றில் துப்பாக்கிக் சூடு நடத்தியதோடு பிணைப்பணத்திற்காக பொதுமக்களையும் கடத்திச் சென்றனர், வெள்ளிக்கிழமையன்று மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிக்காரர்கள் தொடர்ச்சியாக இரண்டு நாள் மேற்கொண்ட தாக்குதல்களில் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!