Latestமலேசியா

நோக்கமில்லா கொலை இரு சகோதர்கள் உட்பட ஐவருக்கு 18 ஆண்டு சிறை

ஈப்போ, ஜூன் 5 ஆண்டுகளுக்கு முன் 54 வயதுடைய Chung Thian Keong என்ற ஆடவருக்கு நோக்கமில்லா மரணம் விளைவித்த திருத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட இரண்டு சகோதரகள் உட்பட ஐவருக்கு ஈப்போ உயர்நீதிமன்றத்தில் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 24 வயதுடைய சி.சதிஸ், அவரது சகோதரரான 24 வயது கார்த்திக் கிருஷ்ணன்,
25 வயது J. ஜெய் கணேஷ், 26 வயது A. அர்ஜூன், 24 வயது V. சிவபாலன் ஆகியோருக்கான சிறை தண்டனை கைது செய்யப்பட்ட 2018ஆம் ஆண்டு மே 18ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக நீதித்துறை ஆணையர் Su Tiang Joo தீர்ப்பளித்தார். கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி இரவு 7மணிக்கும் மறுநாள் காலை 8 மணிக்குமிடையே பத்து காஜா மாவட்டத்தில் Kampung Baru Chendorong கில் ஆற்றோரத்தில் Chung Thian Keong என்ற போதைப் பித்தருக்கு கிற்கு மரணம் விளைவித்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!