
செப்பாங், மார்ச்-21 – அரசு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் சிறப்பு நிதி உதவியாக 500 ரிங்கிட்டை பிரதமர் அறிவித்திருக்கிறார்.
கிரேட் 56 மற்றும் அதற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் மார்ச் 24-ஆம் தேதி தொடங்கி அதனைப் பெறுவர் என, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இவ்வேளையில், ஓய்வுப் பெற்ற பொதுச் சேவைத் துறையினருக்கு 250 ரிங்கிட் ஹரி ராயா உதவி நிதி வழங்கப்படுகிறது.
பென்ஷன் வாங்குபவர்கள் மற்றும் வாங்காதவர்களும் அதிடங்குவர்.
அரசு ஊழியர்களுக்கான போனஸ் விவகாரம் பிப்ரவரியிலேயே தீர்க்கப்பட்டு விட்ட போதிலும், அவர்களின் உழைப்புக்கான ஓர் அங்கீகாரமாக அதுவும் இந்த பெருநாள் காலத்தில் இந்த சிறப்பு நிதியை அரசாங்கம் வழங்குவதாக பிரதமர் சொன்னார்.
இந்த பெருநாள் உதவி நிதிக்கான அரசாங்கத்தின் மொத்த செலவு 1 பில்லியன் ரிங்கிட்டாகும் என்றார் அவர்.