ஜோகூர் பாரு , ஏப் 29 – நோன்பு பெருநாள் காலத்தில் சாலை விதிகளை மீறிய பல்வேறு குற்றங்களுக்காக 14,000 குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜோகூர் சாலை போக்குவரத்துத்துறையின் இயக்குநர் Azmil Zainan Adnan தெரிவித்திருக்கிறார். ஏப்ரல் 1ஆம்தேதி தொடங்கி சாலை போக்குவரத்துத்துறை மேற்கொண்ட 20 நாள் நடவடிக்கையின்போது 60,230 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதாக அவர் கூறினார். நாங்கள் சாலை தடுப்பு பரிசோதனை நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. பெருநாள் காலத்தில் குறிப்பாக சொந்த ஊர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் சூழ்நிலையை நாங்கள் உணர்ந்திருந்தோம்.
எனினும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக மாநிலத்திலுள்ள 12 முக்கிய இடங்களில் சிறப்பு நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டோம் என Azmil தெரிவித்தார். 9,087 குற்றப் பதிவுகள் மோட்டார் சைக்கிளோட்டிளுக்கும் , பஸ் மற்றும் டாக்சிகள் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு 235 குற்றப் பதிவுகளும், வர்த்தக வாகனங்களுக்கு 1,406 குற்றப் பதிவுகளும் வழங்கப்பட்டதாக Azmil கூறினார்.