
கோலாலம்பூர். மே 12 – இவ்வாண்டு நோன்பு பெருநாள் காலத்தின்போது ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை மேற்கொள்ளப்பட்ட Op Selamat சாலை பாதுகாப்பு நடவடிக்கையின்போது 12,407 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்துக்களைவிட இம்முறை 11 விபத்துக்கள் அதிகம் என போலீஸ் படைத் தலைவர் Tan Sri Acryl Sani Abdullah Sani தெரிவித்துள்ளார். அதோடு இவ்வாண்டு நோன்பு பெருநாள் காலத்தின்போது உயிரிழப்பு சம்பந்தப்பட்ட 140 விபத்துக்களில் 146பேர் மாண்டதாகவும் Acryl Sani கூறினார். மரணம் அடைந்தவர்களில் பெரும்பாலோர் அதாவது 94 பேர் மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் அவர்களது பின்னார் அமர்ந்திருந்தவர்களாவர்.