
ஈப்போ, ஏப் 24 – பேரா மாநில அளவிலான நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு ஈப்போ இந்திரா முலியா அரங்கத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மேன்மை தங்கிய பேரா சுல்தான் Nazrin Muizuddin Shah, பேரா ராஜா பெர்மைசூரி Tuanku Zarh Salim பேரா ராஜா மூடா உட்பட அரச குடும்ப உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர். பேரா மந்திரிபுசார் டத்தோஸ்ரீ சரானி முகமட் , ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் , சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த 20,000த்திற்கும் மேற்பட்ட பொதுதுமக்களும் அந்த பொது உபசரிப்பில் கலந்துகொண்டனர்.
ஆயவேற்றுமையிலும் ஒற்றுமை காணும் மலேசியாவின் கலச்சாரத்திற்கு மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மந்திரிபுசார் சரானி முகமட் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சுல்தான் நஸ்ரின் கோலாகங்சார் சுல்தான் அப்துல் அஸிஸ் ஆதரவற்ற இல்லம் மற்றும் Jalan Ashby Ipoh PPR குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சிறார்களுக்கு அன்பளிப்பையும் வழங்கினார்.