
நிபோங் திபால் , மார்ச் 26 – நோன்பு மாதம் முழுவதிலும் பள்ளிகளின் சிற்றுண்டி மையங்களை மூட வேண்டிய அவசியம் இல்லையென கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. முஸ்லிம் அல்லாத மற்றும் நோன்பு நோக்காத மாணவர்களுக்காக பள்ளிகளின் சிற்றுண்டி நிலையங்கள் திறந்திருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் எங்களது நிலையை தெரிவித்துவிட்டோம் என்பதால் பெற்றோர்களும் பள்ள நிர்வாகமும் இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என Fadhlina சுட்டிக்காட்டினார்.