
மணிலா , மார்ச் 2 – பிலிப்பின்ஸில் நோயாளி ஒருவர் உட்பட ஐவரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது. ஒதுக்குப்புறமான Mangsee தீவிவிலிருந்து நோயாளி ஒருவரை மருத்துமனைக்கு ஏற்றிச் சென்றபோது அந்த மருத்துவ ஹெலிகாப்டர் காணாமல்போனதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இன்று காலையில் சுலு கடல் பகுதிக்கு உயரே பறந்தபோது காணாமல்போன அந்த ஹெலிகாப்டரை தேடுவதற்காக கப்பல்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக கடலோர காவற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு வாரங்களுக்கு முன் இரண்டு ஆஸ்திரேலியர்கள் உட்பட நால்வர் சென்ற செஸ்னா சிறு விமானம் பிலிப்பின்ஸில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைவரும் மாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.