
பகடிவதைக்கு உள்ளாகும் மருத்துவர்கள் அது குறித்து குரல் எழுப்ப தயங்க வேண்டாம் என MMA எனப்படும் மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் Muruga Raj Rajathurai அறைகூவல் விடுத்துள்ளார்.
பகடிவதைக்கு உள்ளாகும் மருத்துவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் மலேசிய மருத்துவ சங்கத்தின் HelpDoc helpline அழைப்பு சேவை அல்லது சுகாதார அமைச்சின் MyHelp புகார் பிரிவுக்கு தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கமுடியும் என அவர் தெரிவித்தார்.
உயர் அதிகாரிகளாக உள்ள மருத்துவர்கள் அல்லது மருத்துவமனையின் நிர்வாக தரப்பினரால் பகடிவதையின் பாதிப்புக்கும் மற்றும் பாலியல் தொல்லைக்கு உள்ளானாலும் எவ்வித அச்சமும் இன்றி மருத்துவர்கள் போலீசில் புகார் செய்ய வேண்டுமென டாக்டர் Muruga Raj Rajathurai இன்று வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.