Latestமலேசியா

பகடிவதை சம்பவம் வைரல் ; MCKK பெற்றோர் ஆசிரியர் சங்கம் வருத்தம்

குவாலா கங்சார், நவம்பர் 6 – அண்மையில், MCKK – குவாலா கங்சார் மலாய் பள்ளி மாணவர், பகடிவதைக்கு இலக்கான சம்பவம் வைரலானது குறித்து, அதன் PIBG – பெற்றோர் ஆசிரியர் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

அச்சம்பவத்தை சமூக ஊடகங்களில் பரவலாக பகிர்ந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பள்ளி நிர்வாகத்திற்கு அவப் பெயரை பெற்றுத் தந்துள்ளதாக, முகநூல் பதிவு இன்று வாயிலாக அது தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மாற்றவேண்டுமென, மருட்டல் விடுத்து நான்காம் படிவ மாணவர்கள் சிலரின் பெற்றோர்கள் அனுப்பிய கடிதம் குறித்தும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அறியும்.

பள்ளி நிர்வாகத்தில், சம்பந்தப்பட்ட பெற்றோர்களின் தலையீட்டை பெற்றோர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. அதோடு, அந்த அச்சுறுத்தல்களுக்கு அடிப்பணியாத பள்ளி முதல்வரின் நிலைப்பட்டை பெற்றோர் ஆசிரியர் சங்கம் மதிப்பதாக, ஓர் அறிக்கையின் வாயிலாக அது தெரிவித்தது.

உணவு விடுதி ஒன்றிலிருந்து மாணவர் பகடிவதை செய்யப்பட்டு, விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான முழு விசாரணை அறிக்கையை பெற்றோர் ஆசிரியர் சங்கம் பெற்றுள்ளதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று முழு மாணவர் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி ஒன்றின், நான்காம், ஐந்தாம் படிவ மாணவர்களை உட்படுத்திய பகடிவதை சம்பவம் தொடர்பில், குற்றவியல் சட்டத்தின் கீழ், போலீஸ் விசாரணையை தொடக்கி உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!