
கோலாலம்பூர், அக் 3 – விரைவில் பாகங்கிற்கு ஆச்சரியமான ஒரு அறிவிப்பு காத்திருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இவ்வாரம் பிற்பகுதியில் தாம் ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டிற்கு செல்வதற்கு முன் நாட்டிற்கு மட்டுமின்றி பகாங் மாநிலத்திற்கும் அந்த அறிவிப்பு பயன்தரக்கூடியதாக இருக்கும் என அவர் கூறினார். அக்டோபர் 5-ஆம் தேதி ஐக்கிய அரபு சிற்றரசிற்கு பிரதமர் வருகை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளார். மலேசியாவுக்கு மட்டுமின்றி பாகங்கிற்கும் முக்கியமான அறிவிப்பை நாங்கள் வெளியிடுவோம் என அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்போதைக்கு இது குறித்து பாகங் மந்திரிபுசாரிடம்கூட தாம் தெரிவக்கப்போவதில்லையென அவர் தெரிவித்தார்.