
கோலாலம்பூர்,நவ 28 – தேசிய முன்னணி, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியிலான பகாங் மாநில அரசாங்கத்தை வழிநடத்த , பகாங் மாநில தேசிய முன்னணி தலைவர் வான் ரொஸ்டி வான் இஸ்மாயில் மீண்டும் மெந்திரி பெசாராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அவரது பதவியேற்பு சடங்கு, இன்று காலை மணி 11- க்கு , Istana Abu Bakar அரண்மனையில் நடைபெறும்.
15 -வது பொதுத் தேர்தலில் , அம்மாநிலத்தில் ஆட்சியமைக்க எந்தவொரு கட்சியும் குறுகிய பெரும்பான்மையை பெறத் தவறியது.
பெரிக்காத்தான் நெஷனல் 17 சட்டமன்ற தொகுதிகளிலும், தேசிய முன்னணி 16 இடங்களிலும், பக்காத்தான் ஹரப்பான் எட்டு இடங்களிலும் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க தேசிய முன்னணி பக்காத்தானுடன் ஒத்துழைத்தது.