Latestமலேசியா

சீனாவிலுள்ள 17 தொழிற்பயிற்சி நிலையங்கள் 2,000 மலேசிய மாணவர்களுக்கு தொழில் திறன் பயிற்சிகளை வழங்கும்

கோலாலாம்பூர், ஜன 16 – சீனாவிலுள்ள 17 தொழிற்பயிற்சி நிலையங்கள் மலேசியாவைச் சேர்ந்த 2,000 மாணவர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது. மலேசிய – சீன கழகத்தின் மூலம் இணைந்து TVET பயிற்சிகளை வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக தொழில்திறன் தேசிய தொழிலாளர் இயக்கத்தின் தலைமை செயலாளர் மொஹமட் ரிஸான் ஹசான் தெரிவித்தார். மின்சாரத்தில் ஓடும் கார்களை பழுபார்ப்பது, பல்வேறு துறைகளுக்கான இணைய வசதி, தகவல் தொழிற்நுட்பம் , சூரிய ஒளியின் மூலம் பெறப்படும் தொழிற்நுட்பம் மற்றும் இயந்திரம் தொடர்பாக பயிற்சிகளை வழங்குவதற்கும் சீனா முன்வந்துள்ளதாக அவர் கூறினார்.

மலேசிய – சீன தொழிற்பயிற்சி கல்வி கருத்தரங்கின்போது இது குறித்து இணக்கம் காணப்பட்டதாக அவர் கூறினார். மலேசியா மற்றும் சீனாவுக்கிடையே அரசதந்திர நட்புறவு தொடங்கப்பட்டு 50 ஆம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது நாட்டிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில் திறன் நிலையங்கள் மூலம் மலேசிய மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு சீனா தயாராய் இருப்பதாக மொஹமட் ரிஸான் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!