Latest
பகாங்கில் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு 300 ரிங்கிட் ஊக்கத் தொகை

குவந்தான், ஜூன் 2 -அடுத்தாண்டு பகாங்கில் புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் , அம்மாநில அரசாங்கம் , 200 ரிங்கிட் மதிப்பிலான சேமிப்பு கணக்கைத் திறப்பதோடு, 100 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களையும் வழங்கும்.
‘பகாங்கின் பெருமை மிகு குழந்தைகள்’ எனும் திட்டத்தின் கீழ் அந்த சலுகை வழங்கப்படுவதாக பகாங் மெந்திரி பெசார் Datuk Seri Wan Rosdy Wan Ismail தெரிவித்தார்.
இதனிடையே அத்திட்டத்தின் கீழ், இவ்வாண்டு அம்மாநிலத்தில் புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மரம் நடப்படுவதாகவும் அவர் கூறினார்.