
குவந்தான், பிப் 7 – இன்று காலை வரையில், பகாங்கில், குவந்தான், பெக்கான் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,230-ஆக அதிகரித்தது.
இதுவரை அவ்விரு பகுதிகளிலும், 21 வெள்ளத் துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் , குவந்தானில் மிக அதிகமாக 4, 120 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் பெற்றிருப்பதாக பகாங் பேரிடர் நிர்வாக செயற்குழு தெரிவித்தது.
இவ்வேளையில், குவந்தான், Seri Damai-யில் உள்ள Sungai Belat ஆறும், ரொம்பினில் உள்ள Sungai Keratong ஆறும் அபாய கட்டத்தை எட்டியிருப்பதாக நீர்பாசன வடிகால் துறை தெரிவித்தது.
இதனிடையே, ஜெராண்டூட்டில் சில சாலைகளில் நீர் மட்டம் உயர்ந்திருப்பதால் , நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயணத்தை தொடர் முடியாமல் போனதாக மாநில பொதுப்பணி துறை தெரிவித்தது.
ஜெராண்டூட்- லிப்பிஸ் இருவழி சாலையிலும் நீர் கரை புரண்டோடியதை அடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து நிலைகுத்தியது.