
கோலாலம்பூர். டிச 9 – பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 13 பேர் துணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் தேசிய முன்னணியின் சார்பில் 6 பேரும், Gabungan Parti Sarawak சார்பில் 6 பேரும், Gabungan Rakyat Sabah சார்பில் ஒருவரும், வாரிசான் கட்சியின் சார்பில் ஒருவரும் துணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் DAP பிரதிநிதிகளாக 6 பேரும், பி.கே.ஆர் சார்பில் 5 பேர், பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா சார்பில் 4 பேர், அமான சார்பில் 2பேர், பெர்சத்து சபா சார்பில் 1, பார்ட்டி ராக்யாட் சரவா பிரதிநிதியாக ஒருவர், PBRS சார்பில் ஒருவரும், வாரிசான் சார்பில் ஒருவரும் துணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.