
பூலாய், செப் 6 – பூலாய் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராபான் வேட்பாளருக்கு வாக்களிப்பது “பாவம்” என பிரச்சாரத்தின் போது டான் ஶ்ரீ முஹிடின் யாசின் கூறியதாக பெறப்பட்ட இரண்டு புகார்கள் அடிப்படையில் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி திங்கட்கிழமை அவரிடம் புகிட் அமான் வாக்குமூலம் பதிவு செய்யும்.
அது தொடர்பில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முஹிடினை குற்றப் புலனாய்வு துறையின் சிறப்புப் பிரிவு தொடர்புக் கொண்டு விட்டதாக போலிஸ் படை துணைத் தலைவர் Datuk Seri Ayob Khan Mydin Pitchay தெரிவித்துள்ளார். வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு KL Sentral-லில் உள்ள MIDA அலுவலகத்தில் அந்த வாக்குமூலம் பதிவு செய்யபடும் என்றும் அவர் கூறினார்.