
கோலாலம்பூர், அக் 11 – 15 – ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் தேர்தல் ஒத்துழைப்பு காண்பதில் மலேசிய முன்னேற்ற கட்சி ( MAP ) தோல்வி கண்டதாக அக்கட்சியின் தலைவரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். அந்த கூட்டணியுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சி தோல்வி கண்டதாக இதற்கு முந்தைய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சராக இருந்துள்ள வேதமூர்த்தி கூறினார். பக்காத்தான் ஹரப்பான் இந்தியர் அடிப்படையிலான கட்சியை விரும்பவில்லையென அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் கூறிவிட்டதாக இன்று வெயிட்ட அறிக்கையொன்றில் ஹிண்ட்ராப் இயக்கத்தை தோற்றுவித்தவருமான வேதமூர்த்த்தி தெரிவித்தார்.