ஜோகூர் பாரு, மார்ச் 2 – ஜோகூர் பாருவில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் சொற்பொழிவு கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் கோவிட்டிற்கு எதிரான SOP விதிமுறைகளை மீறியதன் தொடர்பில் 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த கூட்டத்தில் உரையாற்றியோர் முகக் கவசம் அணிந்து கொள்ளத் தவறியது, கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கு MySejahtera செயலியை வைப்பதற்கான இடத்தை ஏற்பாடு செய்யத் தவறியது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறியதன் தொடர்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
அமனா தலைவர் Mohamad Sabu கலந்துகொண்ட அந்த கூட்டம் கோத்தா Iskandar சட்டமன்ற தொகுதியிலுள்ள Skudai Taman Mutiara Rini தேர்தல் நடவடிக்கை அறையில் நடைபெற்றது