திருப்பதி, அக்டோபர்-6, திருப்பதி லட்டு சர்ச்சையே இன்னும் முடியாத நிலையில், அடுத்த விவகாரமாக பக்கர் ஒருவர் சாப்பிட்ட தயிர் சாதத்தில் பூரான் கிடந்ததாக புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி அன்னதானக் கூடத்தில் தான் சாப்பிட்ட தயிர் சாதத்தில் பூரான் கிடந்ததாக சம்பந்தப்பட்ட பக்தர் சமூக ஊடகத்தில் குற்றம் சாட்டினார்.
அதற்கு ஆதாரமாக அவர் பதிவேற்றிய புகைப்படமும் வீடியோவும் வைரலானது.
இதனால், அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் வைரலான குற்றச்சாட்டை திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தயிர் சாதம், சுட சுட சோற்றில் தயாரிக்கப்படுகிறது.
எனவே, அந்த சூட்டில் கொஞ்சம் கூட சிதையாமல் ஒரு முழு பூரான் சாப்பாட்டு இலையில் அப்படியே வந்து விழுவதென்பது சாத்தியமில்லாத ஒன்று.
அக்குற்றச்சாட்டு வெறும் கட்டுக்கதையே என, தேவஸ்தானத்தின் அறிக்கைக் கூறியது.
ஆந்திர மாநில முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, திருப்பதியில் புதிதாக நவீன சமையலறையைத் திறந்து வைத்த அதே நாளில் அக்குற்றச்சாட்டு பரவியது முக்கியத்துவம் பெறுகிறது.