Latestஉலகம்

பக்தாத்தில் ஏவுகனை தாக்குதல் 2 சிறார்கள் உட்பட மூவர் காயம்

பக்தாத், ஜன 15 – பக்தாத்தில் பாதுகாப்பு மண்டலப் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட ஏவுகனை தாக்குதலில் ஒரு பெண்ணும் இரண்டு சிறார்களும் காயம் அடைந்தனர். ஒரு பள்ளியிலும், அமெரிக்க தூதரகத்திற்கு அருகேயுள்ள பகுதியிலும் மேலும் இரண்டு தாக்குதலும் நடத்தப்பட்டதாக ஈராக் தற்காப்பு வட்டார தகவல்கள் தெரிவித்தன. அண்மைய மாத காலமாக அமெரிக்க துருப்புக்களை இலக்காகக் கொண்டு ஈராக்கில் சில தரப்பினர் தாக்குதல் நடத்திவருகின்றனர். இத்தகைய தாக்குதலுக்கு எந்தவொரு தரப்பினரும் பொறுப்பு வகிக்காவிட்டாலும் ஈரானுக்கான ஆதரவான தரப்பினர் அந்த தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!