கோலாலம்பூர், பிப் 25 – பங்கு முதலீட்டு மோசடி தொடர்பில் டத்தோ ஶ்ரீ உட்பட மேலும் சிலரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இதுவரை அந்த மோசடி தொடர்பில் 30 லட்சம் ரிங்கிட் இழப்பை உட்படுத்திய 19 புகார்கள் பெறப்பட்டதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வு துறையின் இயக்குநர் Datuk Mohamad Kamarudin தெரிவித்தார்.
மாதந்தோறும் 4 விழுக்காடு லாபத் தொகை செலுத்தப்படுமெனவும், முதலீட்டு ஒப்பந்தம் முடிந்தவுடன் முதலீட்டு தொகை திரும்ப செலுத்தப்படுமெனவும் முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது.
எனினும் ஆரம்பத்தில் மட்டுமே அவர்களுக்கு லாபத் தொகை செலுத்தப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட முதலீட்டு நிறுவனம் அதன் பின்னர் தலைமைறைவாகிவிட்டதாக Datuk Mohamad Kamarudin தெரிவித்தார்.