
மஞ்சோங், பிப்ரவரி-5 – பேராக், பங்கோர் தீவின், சுங்கை பினாங் பெசாரில் தண்ணீர் சேமிப்பு டாங்கியில் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
Platform P5-வில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு பொது மக்கள் அதனைக் கண்டெடுத்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
சடலம் சவப்பரிசோதனைக்காக ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக, மாவட்ட போலீஸ் தலைவர் Hasbullah Abd Rahman கூறினார்.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் போலீஸை தொடர்புக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.