
மஞ்சோங், மார்ச் 8 – பேராக், லுமுட் பங்கோரில் இரு படகுகள் மோதிக் கொண்ட சம்பவத்தில் உயிரிழந்த மூவர், ஶ்ரீ பத்ர காளியம்மன் கோயிலின் மாசிமக திருவிழாவில் கலந்து கொள்ள சென்று மேற்கொண்டிருந்ததாக தெரிய வந்தது.
அந்த விபத்தில் 43 வயது விஜயலெட்சுமி , 41 வயது எலிசெபத் ராணி, 26 வயது ஜி, தேவப்பிரியா ஆகியோர் , கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதனிடையே விசாரணையில், லுமுட்டிலிருந்து பங்கோர் தீவுக்கு 17 பயணிகளை ஏற்றிச் சென்ற மீனவப் படகில் , பாதுகாப்பு அங்கி வைக்கப்பட்டிருக்கவில்லை என மஞ்சோங்( Manjung) மாவட்ட போலீஸ் தலைவர் Noh Omar Sappi தெரிவித்தார்.
எதிரே வந்த மற்றொரு படகு, விளக்கை எரியவிடவில்லை என அவர் குறிப்பிட்டார். மேலும் சம்பவத்தின்போது வானிலை நன்றாக இருந்ததாகவும் அவர் கூறினார்.