கோலாலம்பூர், அக்டோபர்-8 – கோலாலம்பூர் பசார் செனியில் உடைந்த நீர் குழாயைப் பழுதுப் பார்க்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
புதன்கிழமை அதிகாலை 1 மணிக்குள்ளாக அவை முழுமைப்பெறுமென எதிர்பார்க்கப்படுவதாக Air Selangor நீர் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, இன்று அதிகாலை 6 மணிக்கு ஏற்பட்ட அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை, நாளை அதிகாலை 1 மணி வாக்கில் முழுமையாக சீரடையுமென அது கூறியது.
அந்தந்த பகுதிகளில் நீர் அழுத்தத்தைப் பொருத்து, தண்ணீர் விநியோகம் கட்டங்கட்டமாக வழக்கத்திற்குத் திரும்பும்.
அதுவரை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தண்ணீர் டாங்கி லாரிகள் அனுப்பப்படும்.
மருத்துவமனைகள், கிளினிக்குகள், சிறுநீரக சுத்திகரிப்பு மையங்கள், இறப்பு வீடுகள் போன்றவற்றுக்கு அதில் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த திடீர் நீர் விநியோகத் தடையால், Brickfields, Bukit Damansara, Bukit Persekutuan, Bukit Tunku, Kampung Attap, KL Sentral, Medan Damansara, Taman Bangsar Baru உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.