
கோலாலம்பூர், மார்ச் 28 – வாடகை வீடொன்றில் அழுகிய நிலையில் 20-கும் மேற்பட்ட பூனைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து , அச்சம்பவத்துக்கு காரணமாக இருந்த சரவாக்கைச் சேர்ந்த 31 வயது ஆடவனுக்கு ஈராண்டுகள் சிறையும், 50 ,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
செராஸ், Bandar Sri Permaisuri -யில் உள்ள Bayu Tasik அடுக்குமாடியில் வாடகைக்கு தங்கியிருந்த லிம் ஜியா லின் ( Lim Chia Lin ) என்பவர், உணவு தண்ணீர் கொடுக்காமல் தனது ஐந்து பூனைகளின் இறப்புக்கு காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டான்.
அந்த ஆடவன், ஒரு மாதம் தனது சொந்த ஊருக்கு திரும்பியபோது , தான் வளர்த்து வந்த பூனைகளுக்கு உணவு கிடைப்பதற்கான எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை.
மேலும் பட்டினியால் மடிந்த அந்த பூனைகளின் சடலங்களைப் புதைக்காமல் வீட்டிலேயே வைத்திருந்ததால், கடும் துர்நாற்றம் வீசியதா, குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.