குவா மூசாங், நவம்பர்-26, கிளந்தான், குவா மூசாங், கம்போங் பாரு ஸ்டாரில் 4 மீட்டர் நீளம் 50 கிலோ கிராம் எடை கொண்ட ‘பாத்திக்’ வகை மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது.
கிராம மக்கள் கொடுத்த புகாரை அடுத்து நேற்றிரவு 8 மணியளவில் வந்து சேர்ந்த APM எனப்படும் பொது தற்காப்புப் படையினர் 30 நிமிடங்கள் போராடி அதனைப் பிடித்தனர்.
பிடிக்கும் போது மலைப்பாம்பு முரண்டு பிடித்ததைப் பார்த்தால் அது கடும் பசியில் இருந்தது போலும் என APM அதிகாரி கூறினார்.
பாம்பு தற்போது வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காடுகள் அல்லது புதர் பகுதிகளுக்கு அருகே வசிக்கும் மக்கள், இந்த மழைக்காலத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென APM கேட்டுக் கொண்டுள்ளது.