
கோலாலம்பூர், ஆக 20 – அண்மையியில் நடைபெற்ற மாநில தேர்தலில் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் பெரிக்காத்தான் நேசனல் தொகுதிகளை வெவ்தற்கு காரணமாக இருந்த பசுமை அலையை ஜோகூரில் விரிவுபடுத்தும் நம்பிக்கையை பாஸ் கொண்டிருப்பதாக அக்கட்சியின் தேசிய தலைவர் Abdul Hadi Awang தெரிவித்திருக்கிறார். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் Pulai நாடாளுமன்றம் மற்றும் Simpang Jeram சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் வெற்றிபெறும் சாத்தியம் இருப்பதாக அவர் கூறினார். சிலாங்கூரிலும் நெகிரி செம்பிலானிலும் பசுமை அலை கிடையாது என சில தரப்பினர் கூறியிருந்தாலும் அவ்விரு மாநிலங்களிலும் வீசிய பசுமை அலை பெரிக்காத்தான் நேசனல் கூட்டணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளதை Hadi Awang சுட்டிக்காட்டினார். எங்களது செல்வாக்கு ஜொகூருக்கு அப்பாலும் எட்டும் என அவர் தெரிவித்தார்.