Latestஉலகம்

‘பச்சை கண் அழகி’ ஆப்கான் பெண்ணுக்கு இத்தாலி புகலிடம்

ரோம், நவ 26 – National Geographic சஞ்சிகையின் முகப்பக்கத்தில் பிரசுரமாகி பிரபலமான , பச்சை நிற கண்கள் உடைய ஆப்கான் பெண்ணுக்கு, இத்தாலி அடைக்கலம் தந்துள்ளது.

தலிபான், ஆப்கானை கைப்பற்றியதை அடுத்து, அந்நாட்டிலிருந்து வெளியேற நினைக்கும் அந்நாட்டு மக்களை பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் இத்தாலி ஈடுபட்டுள்ளது. அந்த முயற்சியின் கீழ் ‘Sharbat Gula’ எனும் பெண்ணுக்கான பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக இத்தாலிய பிரதமர் Mario Draghi தெரிவித்தார்.

1985- இல் சோவியட் -ஆப்கான் போர் காலத்தின் போது , பாகிஸ்தான் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ‘Sharbat Gula’-வின் படத்தை, அமெரிக்க போர் புகைப்படக் கலைஞர் Steve McCurry என்பவர் எடுத்திருந்தார். அந்த படம் National Geographic சஞ்சிகையில் பிரசுரமாகி அப்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!