
கோத்தா கினபாலு, ஏப் 13 – சபாவில் Kampung Sin Singon னில் Sungai Penawan ஆற்றில் படகு மூழ்கியதில் 26 வயதுடை பெண் மூழ்கி மாண்டார். அந்த சம்பவத்தில் அவரது 9 மற்றும் 7 வயது பிள்ளைகள் காணவில்லை என அறிவிக்கப்பட்டது. அந்த பெண்ணின் 36 வயது கணவரும் 5 வயதுடைய மற்றொரு மகனும் உயிர் தப்பினர். Lerina Rody என்ற பெண்ணின் உடலை பொதுமக்கள் கண்டதைத் தொடர்ந்து அவரது உடல் மீட்கப்பட்டது. காணாமல்போன இருவரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.