Latestமலேசியா

படகு கவிழ்ந்போது மாண்டவர்களில் நால்வரின் உடல் மீட்பு

லுமுட், டிச 31 – பங்கோர் தீவில் Pulau Jarak பகுதியில் மிதந்த நால்வரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. சிலாங்கூர் Sekinchanனில் கடந்த சனிக்கிழமை படகு கவிழ்ந்தபோது மூழ்கி மாண்டவர்களின் உடல்களாக அவை இருக்கக்கூடும் என பேரா போலீஸ் தலைவர் டத்தோ Mior Faridalathrash தெரிவித்தார். மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆடவரின் சடலங்கள் கடலில் மிதப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதாக மலேசிய கடல் பாதுகாப்பு நிறுவனத்திடமிருந்து தகவலைப் பெற்றதாக அவர் கூறினார்.

அந்த நால்வரும் எந்தவொரு ஆவணங்களை கொண்டிருக்கவில்லை. 20 பேர் ஏறிச் சென்ற படகு ஒன்று கடந்த சனிக்கிழமை மாலை மணி 3.30 அளவில் கவிழ்த்தை தாம் கண்டதாக ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்திருந்தார். எனவே நேற்று கடலில் கண்டுப்பிடிக்கப்பட்ட அந்த நான்கு உடல்களும் படகு விபத்தில் மூழ்கி மாண்டவர்களாக இருக்கக்கூடும் என டத்தோ Mior Faridalathrash வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!