Latestமலேசியா

பட்ஜட் 2025

குறிப்பு: புதிய பட்ஜட் அறிவிப்புகளைப் பெறுவதற்கு இந்த பக்கத்தை மீண்டும் புதுப்பிக்கவும் (refresh).

8.15pmஉள்ளாட்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சு இந்திய கிராமங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பணியை மேற்கொள்ள பணிக்கப்பட்டுள்ளது. சீனப் புதிய கிராமங்களுக்கு RM84 மில்லியன்.

8.00pm – முதல்முறையாக வீடு வாங்குபவர்களுக்கான வரி விலக்கு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

RM500,000க்கும் குறைவான விலையிலான வீட்டிற்கு RM7,000 வரை வரி விலக்கும் RM500,000 -லிருந்து RM750,000க்கும் விலையிலான வீட்டிற்கு, RM5,000 வரி விலக்கும் வழங்கப்படும்.

7.55pmஆட்டிசம் குறைப்பாடு கொண்ட குழந்தைகளின் சிகிச்சைக்கான வரி விலக்கு RM4,000 லிருந்து RM6,000 ஆக உயர்த்தப்படவுள்ளது.

மேலும், ஆட்டிசம் குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டண உதவித் தொகையாக அரசாங்கம் RM15 மில்லியனையும் ஒதுக்குகிறது. தடுப்பூசி, பெற்றோர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கான மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய தனிநபர் வரி விலக்கு விரிவுபடுத்தப்படும்.

அதே நேரத்தில் குழந்தை பராமரிப்புக்காக அலவுன்ஸ்களை வழங்கும் முதலாளிகளுக்கான வரிக் குறைப்பு முதியோர் பராமரிப்புக்கும் விரிவுபடுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கூடுதல் வரிச் சலுகை RM7,000 ஆகவும், மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கான வரிச் சலுகை RM6,000 ஆகவும், திருமணமாகாத மாற்றுத்திறனாளிகளை குடும்ப உறுப்பினர்களாக கொண்டவர்களுக்கு வரிச் விலக்கு RM8,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

7.45pmஇந்தியர்களின் மனிதவளம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான RM130 மில்லியன் ஒதுக்கீட்டில், மித்ராவுக்கு RM100 மில்லியனும் தெக்கூனுக்கு RM30 மில்லியனும் வழங்கப்படும்.

7.40pm – இஸ்லாமிய விவகாரங்களுக்கு RM2 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 100 ஹலால் சான்றிதழ் கண்காணிப்பாளர்களை ஜாக்கிம் பணியமர்த்தவுள்ளது.

7.37pmதேசிய விளையாட்டு மேம்பாட்டுக்காக RM230 மில்லியன் ஒதுக்கீடு. தேசிய சேவை பயிற்சி திட்டம் 3.0க்கு (PLKN) RM50 மில்லியன்.

7.15pmகிரேட் 56 மற்றும் அதற்கு குறைவான தகுதி கொண்ட அரசாங்க ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுப் பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு 250 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்படும். ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கான உதவித்தொகை RM300 ரிங்கிட்டிலிருந்து RM500 ரிங்கிட்டாக அதிகரிக்கப்படும். அரசு ஊழியர்களின் குடியிருப்புகளின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்கு RM1.8 பில்லியனுக்கும் மேல் பயன்படுத்தப்படும்.

7.00pmகல்வி அமைச்சுக்கு RM64.1 பில்லியன் ஒதுக்கீடு; பள்ளிகளில் இலவச உணவு திட்டத்திற்கு RM870 மில்லியன்

கல்வி அமைச்சுக்கு RM64.1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 2 பில்லியன் ரிங்கிட் நாடு தழுவிய நிலையில் பள்ளிகளை மேம்படுத்தவும் பராமரிக்கவும் பயன்படுத்தப்படும். மேலும் ஆரம்ப பள்ளி உதவிக்காக கிட்டத்தட்ட RM800 மில்லியன் உபயோகிக்கப்படும்.

நாடு முழுவதும் 44 பள்ளிகளின் கட்டுமானப் பணிகளும் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. பள்ளிகளில் இலவச உணவு திட்டத்திற்கு RM870 மில்லியன் பயன்படுத்தப்படும்.

6.57pmசுகாதார அமைச்சிற்கு RM45.3 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதார வசதிகளைப் பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் பணிகளுக்கு RM1.35 பில்லியன் பயன்படுத்தப்படும். 2025, ஜனவரி 1 முதல், சர்க்கரை பானங்கள் மீதான கலால் வரியை லிட்டருக்கு RM 0.40 உயர்த்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

6.49pm – உயர்கல்வி அமைச்சிற்கு RM18 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

6.30pm – 2025ஆம் ஆண்டிற்கான பட்ஜட் தாக்கலின் போது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு என்ற 734வது திருக்குறளை ஒப்புவித்தார்.

மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நல்ல நாடாகும் என்ற பொருள் மிகுந்த அத்திருக்குறளை இன்றைய பட்ஜட் தாக்கலின் போது பிரதமர் கூறி விளக்கமளித்தார்.

6.25pm – வெளிநாட்டு தொழிலாளர்களும் ஊழியர் சேம நிதி வாரியத்திற்கு (EPF) சந்தா செலுத்துவது கட்டாயமாக்கப்படும். இது கட்டம் கட்டமாக அமலுக்கு வரவுள்ளது.

6.16pm – குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு RM1,500ல் இருந்து RM1,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. 5-க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில், இத்திட்டம் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும்.

6.10pmரஹ்மா உதவி தொகைக்கு கூடுதல் RM3 பில்லியனோடு, 2025ஆம் ஆண்டிற்கு RM13 பில்லியன் ரிங்கிட்டாக ஒதுக்கிடப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் RM10 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதி நிதி அதிகரிப்பு 60 விழுக்காடு பெரியவர்களுக்குப் பயனளிக்கும்.

2024ஆம் ஆண்டு 700,000 குடும்பங்களுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டில் RM4.1 மில்லியன் குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் RM100 ரிங்கிட் பண உதவியைப் பெறுவார்கள். இந்த ரொக்கம் ஏப்ரல் 2025 முதல் பெறுநர்களின் MyKadல் சேர்க்கப்படவுள்ள நிலையில் இது அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமே செலவிட முடியும்.

இதனிடையே திருமணமாகாதவர்களுக்கு RM600 ரஹ்மா உதவித் தொகை வழங்கப்படும். முதியவர்களுக்கான ரஹ்மா உதிவித் தொகை ஒவ்வொரு மாதமும் RM500 ரிங்கிட்டிலிருந்து RM600 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில், 6 வயதுக்கும் கீழ்ப்பட்ட குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் RM250 ரிங்கிட் , 7 முதல் 18 வயதிலான குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் RM200 ரிங்கிட் வழங்கப்படும். இது 2024ஆம் ஆண்டில், RM200 ரிங்கிட் மற்றும் RM150 ரிங்கிட்டாக இருந்தது.

இருப்பினும், அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு RM1,000 மட்டுமே வழங்கப்படும்.

5.55pmரஹ்மா உதவி தொகைக்கு கூடுதல் RM3 பில்லியனோடு, 2025ஆம் ஆண்டிற்கு RM13 பில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் RM10 பில்லியன் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிதி அதிகரிப்பு 60 விழுக்காடு பெரியவர்களுக்குப் பயனளிக்கும்.

5.44pmநாட்டை உலுக்கிய மஸ்ஜிட் ஜாமேக் நில அமிழ்வு சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு தழுவிய நிலையிலான நில அமிழ்வு சீரமைப்பு பணிகளுக்கு RM250 மில்லியன் ஒதுக்கீடு.

5.40pmஇந்தியர்களின் மனித மூலதனம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள RM130 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய வணிகர்களின் வளர்ச்சி நிதியும் இதில் அடங்கும்.

5.30pm – கிராமப்புறத்தில் செயல்படும் நடமாடும் கிளினிக்குகள் போன்ற சேவைகளுக்கு RM100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

5.29pm – கோலாலம்பூரில் உள்ள முக்கிய கலாச்சார தளங்களை சீரமைக்கும் பணிகளுக்கு RM600 மில்லியன்.

5.21pm – சுற்றுலாத் துறை மேம்பாடு மற்றும் 2026 மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டிற்கான நடவடிக்கைகளுக்கு RM550 மில்லியன் ஒதுக்கீடு.

5.10pmவெள்ளப் பேரிடர்களை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை முகமைக்கு (NADMA) RM600 மில்லியன் ஒதுக்கீடு. திடீர் வெள்ளத்தைச் சமாளிக்க RM150 மில்லியன்.

5.05pm2025 வரி மதிப்பீட்டு ஆண்டிலிருந்து RM100,000க்கும் அதிகமான லாப ஈவுத் தொகை ஈட்டும் தனிநபர்களுக்கு 2% வரி விதிக்கப்படும்.

EPF சேமிப்புகள், PNB இன் கீழ் யூனிட் அறக்கட்டளைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஈவுத்தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

5.01pmமலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு RM360 மில்லியன் ஒதுக்கீடு. (பட்ஜட் 2024 – RM338 மில்லியன்)

4.55pm – உயர்மட்ட 15 விழுக்காட்டு வருவாய் பிரிவினருக்கு (T15), கல்வி மானியங்கள் படிப்படியாகக் குறைக்கப்படும்.

இந்த சேமிப்பு தங்கும் வசதி கொண்ட பள்ளிகள் மற்றும் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.

4.50pmசபா மற்றும் சரவாக்கிற்கான மேம்பாட்டு ஒதுக்கீடு RM6.7 பில்லியன் & RM5.9 பில்லியன்.

சிறப்பு ஒதுக்கீடு இரட்டிக்கப்பட்டு RM600 மில்லியனாக அறிவிப்பு. 1969ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மதிப்பீடு.

4.40pm – பெட்ரோல் உதவித் தொகை

RON95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட மானியம் 2025ஆம் ஆண்டின் மத்தியில் செயல்படுத்தப்படும். 85 விழுக்காட்டு மக்களுக்குப் பாதிப்பில்லை. RM8 பில்லியன் சேமிப்பு.

4.30pm2025ஆம் ஆண்டிற்கு RM421 பில்லியன் பட்ஜட் ஒதுக்கீடு, மலேசிய வரலாற்றில் மிக அதிக பட்ஜட் ஒதுக்கீடு. 

2025ஆம் ஆண்டிற்கான அரசாங்க பட்ஜட் RM421 பில்லியன் ரிங்கிட் என அறிவித்துள்ளார் பிரதமர். இது 2024ஆம் ஆண்டைக் காட்டிலும், RM27.2 பில்லியன் ரிங்கிட் அதிகமாகும்.

மலேசிய வரலாற்றில் 400 பில்லியனைத் தாண்டிய முதல் பட்ஜட் தாக்கல் இதுவாகும். செயல்பாட்டுச் செலவிற்கு 79.6 விழுக்காடு அதாவது RM335 பில்லியன் பயன்படுத்தப்படவுள்ள நிலையில், மேம்பாட்டுச் செலவினங்களுக்காக RM86 பில்லியன் ஒதுக்கப்படுகிறது.

4.00pm – துணை சபாநாயகர் ராம்லி முகமட் நோர், மலேசிய வரலாற்றில் பட்ஜெட் தாக்கலுக்கு தலைமை தாங்கும் முதல் ஒராங் அஸ்லி சமூகத்தைச் சார்ந்தவர். பாரம்பரிய ஒராங் அஸ்லி தலைக்கவசம் அணிந்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!