ஷா அலாம் , டிச 19- பணத் தேவை ஏற்பட்டதால் 26 வயது நூருல் அசிகின்
(Nurul Asikin Lan ) என்ற பெண்ணை கொலை செய்து அவரது நகைகளை அடகுக் கடையில் வைத்ததை சந்தேகப் பேர்வழி ஒப்புக்கொண்டுள்ளான். டிசம்பர் மாதம் 8ஆம்தேதி நொம்பென்னில் Mitsubishi Electric ஆசியான் கிண்ண காற்பந்து போட்டியில் மலேசியாவுக்கும் கம்போடியாவுக்குமிடையே ஆட்டத்தை நேரில் சென்று காண்பதற்கு தனக்கு பணம் தேவைப்பட்டதால் நுருல் அசிகினை கொலை செய்ததோடு அப்பெண் கையில் அணிந்திருந்த தங்க வளையல் மற்றும் தொங்கட்டான் ஆகியவற்றை அடகு வைத்ததையும் அந்த ஆடவன் ஒப்புக் கொண்டதாக சரவா போலீஸ் ஆணையர் Manca Ata கூறினார்.
அந்த பெண்ணின் கொலைக்கு முழுக்க முழுக்க பணமே நோக்கமாக இருந்ததாக தற்போது விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த ஆடவன் ஒப்புக் கொண்டதாக Manca கூறினார். தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து பாரக்கையில் விசாரணை முடிவுறும் தருவாயில் இருக்கிறது. கொலை செய்யப்பட்ட பின் அந்த பெண்ணின் உடல் வீசப்பட்ட இடத்தையும் சந்தேகப் பேர்வழி காட்டியதால் அப்பெண்ணின் உடலும் கூச்சிங், Tabuan Jaya வில் குப்பைகள் வீசும் இடத்திற்கு அருகேயுள்ள கால்வாயில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அப்பெண்ணின் உடல் முழுமையான ஆடையின்றி மீட்கப்பட்டதால் இதனைத் தொடர்ந்து புதிய ஆதாரமும் கிடைத்திருப்பதாகவும் Manca தெரிவித்தார்.