கோத்தா கினாபாலு , பிப் 17 – பணப் பிரச்சனையால் ஏற்பட்ட தகராற்றின் போது , கணவன் மனைவியின் மீது கொதிக்கும் சுடுதண்ணீரை ஊற்றியுள்ளான். பின்னர் அந்த ஆடவன் தன்னைத் தானே கத்தியால் குத்தி காயப்படுத்திக் கொண்டான்.
அந்த சம்பவம் நேற்றிரவு மணி 11.30 வாக்கில் , கோத்தா கினாபாலு Pulau Gaya- விலுள்ள Kampung Pondo பகுதியில் நிகழ்ந்ததாக, அம்மாவட்ட போலீஸ் தலைவர் George Abdul Rakman தெரிவித்தார்.
சின மாதங்களுக்கு முன்பாகத்தான் திருமணம் செய்துக் கொண்ட அவ்விருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நிகழ்ந்து வந்ததாகவும், அப்போது கணவனை மனைவி எட்டி உதைத்தும் அறைந்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.