
கோலாலம்பூர், செப் 19 – முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீய் யாசின் தனது நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்ட Jana Wibawa திட்டத்துடன் தொடர்புடைய சுமார் 200 மில்லியன் ரிங்கிட் பணமோசடி குற்றச்சாட்டுகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என விரைவில் விண்ணப்பம் செய்யவிருப்பதாக அவரது வழக்கறிஞர் Hisyam Teh Poh Teik இன்று செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Azrua Alwi யிடம் தெரிவித்திருக்கிறார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 173 (ஜி) பிரிவின் கீழ் (குற்றங்கள்) ஒதுக்கி வைப்பதற்கான விண்ணப்பம் செய்யப்படும் என அவர் தெரிவித்தார். அந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நீதிமன்றம் கருதினால் குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதிக்கிறது.
தாம் தலைமையேற்றுள்ள பெர்சத்து கட்சிக்காக மொத்தம் 232.5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெறுவதற்காக முஹிடின் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நான்கு குற்றச்சாட்டுகளை முறியடிக்க முகைதினின் விண்ணப்பத்தை ஏற்னவே உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளதை அரசாங்க தரப்பு வழக்கறிஞர் டி.பி.பி வான் ஷஹாருடின் வான் லாடின் அசுராவிடம் சுட்டிக்காடடினார்.