Latestஇந்தியா

பணம் கொடுக்கவில்லை ; இரயிலில் பாம்புகளை விட்டு பயணிகளை அச்சுறுத்திய பாம்பாட்டிகள்

புது டெல்லி, செப்டம்பர் 16 – இந்தியா, உத்தரபிரதேச மாநிலத்தில், பாம்புகளை வைத்து வித்தை காட்டிய நான்கு பாம்பாட்டிகள், அதன் பின்னர் பணம் தர மறுத்த பயணிகளை அச்சுறுத்த, இரயிலில் பாம்புகளை விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஒன்பதாம் தேதி, ஹவுரா (Howrah) நகரிலிருந்து குவாலியர் (Gwalior) நகரை நோக்கி பயணித்த சம்பல் எக்ஸ்பிரஸ் (Chambal Express) இரயிலில் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

பாம்பை வைத்து வித்தை காட்டிய பாம்பாட்டிகளுக்கும், பணம் தர மறுத்த பயணிகள் சிலருக்கும் இடையில் வாய் சண்டை மூண்டுள்ளது.

அதனால் பயணிகளை அச்சுறுத்த அவர்கள் சில பாம்புகளை இரயிலில் விட்டதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

பீதியடைந்த பயணிகள், இருக்கையில் தாவி ஏறி நின்றதோடு, சிலர் கழிவறைகளில் தஞ்சம் புகுந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அந்த பாம்பாட்டிகள் பாம்புகளுடன் இரயிலை விட்டு இறங்கிச் சென்றதாக கூறப்பட்டது.

அச்சம்பவம் தொடர்பில், இரயில் நிலைய போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு , அவர்கள் இரயிலை முழுமையாக சேதனையிட்டதோடு, பாம்பு எதுவும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!