Latestஇந்தியாஉலகம்

பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு தீவிர முயற்சி – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதுடில்லி, செப் 23 – பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பண வீக்கத்தை 4 விழுக்காட்டிற்கு கீழ் வைத்திருப்பதற்கும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தை அமெரிக்கா அனுபவித்து வருகிறது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழச்சி, பணவீக்கம் உட்பட பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களையும் மத்திய அரசு கண்காணித்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதோடு மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையில், சரியான நேரத்தில் கிடைப்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!