Latestமலேசியா

சபா புலாவ் செபி தீவில் சீன சுற்றுப் பயணி கடலில் மூழ்கி மரணம்

கோத்தா கினபாலு, மார்ச் 16 – விடுமுறையை கழிப்பதற்காக மலேசியாவிற்கு வருகை புரிந்த சீன தம்பதியரின் சுற்றுலா சோகத்தில் முடிந்தது. அந்த தம்பதியரில் ஒருவரான 51 வயதுடைய ‘Zhou Chunguang’ என்ற ஆடவர் சபா , புலாவ் செபி கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மரணம் அடைந்தார்.

‘Zhou’வும் அவரது மனைவியும் நேற்று காலை மணி 10 அளவில் சுற்றுலா படகு மூலம் புலாவ் செபிக்கு வருகை புரிந்தனர். அப்போது அந்த கடற்கரையில் மதியம் மணி 12.45 அளவில் ‘Zhou’ தனியாக குளித்துக்கொண்டிருந்தபோது அவரது மனைவி கடற்கரையில் இருந்துள்ளார்.

சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு ‘Zhou’ கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து இதர இரண்டு சுற்றுப்பயணிகள் கடலோர பாதுகாவலர்களின் உதவியை நாடினர்.

அதன்பிறகு ‘Zhou’வின் உடல் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு அவருக்கு சுவாச உதவி வழங்கப்பட்ட பின் சுற்றுலா படகின் முலம் ‘Jeselton’ முனையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து எலிசபெத் மகாராணி மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டது.

‘Zhou’வை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியதாக Kota Kinabalu மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமது சைடி அப்துல்லா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!