
கோலாலம்பூர், மார்ச் 21 – பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கும்படி முதலாளிகள் மற்றும் தொழில் துறைளை மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் 24ஆவது தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார கண்காட்சி மாநாடு நடைபெறுகிறது.
80 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளும் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் பற்றிய அறிவியல் மாநாடு (SICCOSH) ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக விளங்கும் என்பதோடு பணியிடத்தில் உள்ள சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை முதலாளிகள் அடையாளம் காண இந்த மாநாடு பெரிதும் உதவும் என சிவக்குமார் தெரிவித்தார்.
முதலாளிகள் மற்றும் தொழில்துறையினர், 1994 ஆம் ஆண்டு தொடர்பான சட்டங்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள பூர்த்தி செய்ய உதவுவதற்காக, நிபுணர்கள் மற்றும் 15 அனைத்துலக ஆய்வகங்களால் ஆதரிக்கப்படும் விரிவான பாதுகாப்பு ஆலோசனைகளையும் சேவைகளையும் NIOSH வழங்குகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள, இந்த மாநாட்டிற்கு “வேலையின் எதிர்காலம்” அல்லது Masa Depan Kerja என்ற கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் சிவக்குவமார் தெரிவித்தார்.