
கிளந்தான், பாசோக்கிலுள்ள, இடைநிலைப் பள்ளி ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வந்த 40 வயது ஆடவர் ஒருவர் இன்று காலை இறந்து கிடக்க காணப்பட்டார்.
நேற்றிரவு வேலைக்கு சென்ற அவர், சோர்வாக இருப்பதாகவும், உறங்கப் போவதாகவும், அங்கு பணியில் இருந்த மற்றொரு பாதுகாவலரிடம் கூறியுள்ளார்.
எனினும், இன்று காலை வேலை முடிய இன்னும் அரை மணி நேரமே எஞ்சியிருந்த சமயத்தில், அவரை எழுப்ப முயன்ற போது, அவர் இறந்து கிடப்பதை அந்த சக பாதுகாவலர் கண்டதாக, பாச்சோக் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் முஹமட் ஜோஹான் செமான் தெரிவித்தார்.
ஏற்கனவே, இரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அந்த ஆடவர், இரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக உயிரிழந்திருக்ககூடுமென நம்பப்படுகிறது.
அதனால், அதனை ஒரு திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.