
காஜாங், பிப்ரவரி-4 – சிலாங்கூர் பண்டார் பாரு பாங்கியில் வீட்டை உடைத்துத் திருடி வைரலான ஆடவனைப் போலீஸ் தேடுகிறது.
சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் தனது மாமியாரின் வீட்டில் திருடுபோனதாக 38 வயது ஆடவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
அச்சம்பவத்தில் 2 மோதிரங்கள் களவுப் போயின.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ், திருடனின் முகம் வீட்டிலிருந்த CCTV-யில் பதிவாகியிருப்பதை கண்டறிந்தது.
சந்தேக நபரை அடையாளம் காணும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள போலீஸ், தகவல் தெரிந்த பொது மக்களின் உதவியையும் நாடியுள்ளது.