
புத்ராஜெயா, பிப் 15 – வெளிநாடுகளில் தனிநபர்கள் வைத்திருக்கும் சொத்து விபரங்களை கசியச் செய்த, 2021 Pandora அறிக்கை தொடர்பில் , MACC மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், முன்னாள் அமைச்சர் ஒருவரின் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளது.
இவ்வேளையில் அந்த அறிக்கை தொடர்பில் , முன்னாள் பிரதமரின் மகனும் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக, பெயர் குறிப்பிடாத நம்பத்தகுந்த வட்டாரம், உள்ளூர் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டது.
அதன் தொடர்பான விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்திலே இருப்பதாகவும், விரைவில் மேலும் அதிகமானோர் விசாரணைக்கு அழைக்கப்படலாமெனவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, MACC – யில் வாக்குமூலம் அளித்த நபர் துன் மகாதீர் காலத்தில் முதன்மை அமைச்சராக இருந்தவர் என நம்பப்படுகிறது.