சென்னை, நவம்பர்-10, தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ், உடல் நலக் குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 80.
கடந்த 3 நாட்களாகவே உடல்நிலை குன்றியிருந்த நிலையில், நேற்றிரவு 11.30 மணிக்கு சென்னையில் உள்ள தனது வீட்டில் அவரின் உயிர் பிரிந்தது.
குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தனது பண்பட்ட நடிப்பால் முத்திரைப் பதித்தவர் டெல்லி கணேஷ்.
நாயகன், அவ்வை ஷண்முகி, சம்சாரம் அது மின்சாரம், தெனாலி போன்றவை அவரின் நடிப்பாற்றலை பறைசாற்றும் படங்களாகும்