Latestஉலகம்

பதவியிழப்புக்கு அமெரிக்காவைக் குற்றம் சாட்டும் வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

புது டெல்லி, ஆகஸ்ட்-12 – வங்காளதேசத்தில் தனது ஆட்சி முடிவுக்கு வந்ததன் பின்னணியில் அமெரிக்கா இருந்திருப்பதாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா வாஜீட் குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த செயின்ட் மார்டின் (Saint Martin) தீவின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க நான் மறுத்தேன்; அப்படி கொடுத்திருந்தால், வங்காள விரிகுடாவை அமெரிக்கா தன் வசப்படுத்தியிருக்கும்.

ஆனால் அது நடக்காத காரணத்தால், சதி வேலைகளால் மக்கள் புரட்சியின் மூலம் தாம் வீழ்த்தப்பட்டிருப்பதாக, The Economic Times பத்திரிகைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் 76 வயது ஹிசீனா கூறிக்கொண்டார்.

மாணவர்களை இரத்தம் சிந்த வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டார்கள்; அதனை அனுமதிக்கக் கூடாதென்ற ஒரே காரணத்திற்காகவே நான் பிரதமர் பதவியைத் துறந்தேன்.

பதவி தான் முக்கியமென்றால் அமெரிக்காவிடம் நாட்டையே தாரை வார்த்திருப்பேனே என்றும் அவர் சொன்னார்.

நாட்டை கூறு போட நினைக்கும் கெட்ட சக்திகளின் பிடியில் சிக்கி அவர்களின் செயல்களுக்குத் துணைபோக வேண்டாமெனவும் ஹசீனா வங்காளதேச மக்களைக் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!